சர்வதேச ஆற்றல் ஆணையமானது (IEA - International Energy Agency) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலகளாவிய ஆற்றல் தேவையானது 2020 ஆம் ஆண்டில் 6% என்ற அளவில் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 70 ஆண்டில் சதவிகித அளவில் மிகப்பெரிய சரிவு இதுவாகும். அறுதி அளவில் இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி இதுவாகும்.
இந்தியாவில், 2019 ஆம் ஆண்டில் குறைவான தேவை வளர்ச்சியைத் தொடர்ந்து தற்பொழுது முதன்முறையாக ஆற்றல் தேவையானது குறையத் தொடங்கும்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் (OECD - The Organisation for Economic Co-operation and Development) கட்டமைப்பின்படி 1974 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்ட IEA ஆனது தனிச் சுதந்திரம் கொண்ட அரசாங்கங்களுக்கு இடையேயான ஒரு அமைப்பாகும்.
இதன் தலைமையகம் பிரான்சின் பாரிஸில் அமைந்துள்ளது.
இதற்கு உறுப்பினராக வேண்டி விண்ணப்பிக்கும் நாடு OECD அமைப்பில் கட்டாயம் உறுப்பினராக இருக்க வேண்டும்.
ஆனால் OECD அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் IEA அமைப்பில் உறுப்பினராக இல்லை.
IEAவின் அறிக்கைகள்
உலக ஆற்றல் & கார்பன் டை ஆக்ஸைடின் நிலை குறித்த அறிக்கை